பத்திரிகைகளின் மதிப்புரை

WELCOME TO THE TREASURE OF BOOKS IN PRAISE OF LORD HANUMAN


Sri Hanumath Dyana Slokangalஸ்ரீ ஹநுமத் தியான ஸ்லோகங்கள்
மொழி:ஸம்ஸ்க்ருதம்+தமிழ்
பக்கம் : 32
விலை : ரூ. 15/-


 

சிவ ஒளி [ஜூன் 2012]

உலகினுக்கே ஆத்மாவாக விளங்குகிற வாயுவின் புதல்வரும், பார்வதியின் ரூபத்தையும், ஈஸ்வரனின் புதல்வனுமாகத் திகழுகிற மங்களமான ஹனுமான் ஒட்டகத்தை வாகனமாகக் கொண்டு உலவி யோகிகளின் தியானவுருவாக நிலைத்து பம்பா நதிக்கரையிலும், கந்தமாதன மலைச்சரிவிலும் சஞ்சரிக்கிற ஸ்ரீ ஹநுமனைக் குறித்து ’ஸ்ரீ ஹநுமத் தியான ஸ்லோகங்கள்’ எனும் நூல் ஸம்ஸ்க்ருத எழுத்தில் தமிழ் அர்த்தத்தோடு வெளியாகி இருக்கிறது. துளசிதாசர் ஹநுமான் சாலிஸாவில் தும்ஹரே பஜந ராம கோ பாவை (யார் தங்களை வழிபடுகின்றன்ரோ அவர்கள் ஸ்ரீராமனை அடைகின்றனர் அதாவது அநுமனின் வால் பிடித்து ஸ்ரீராமரின் சரணாரவிந்தம் அனுபவிக்கலாம்) எனும் வரிகளில் நாம் வாழும் நாளை சாதிக்க உதவும் விதமாக தியான ச்லோகங்களை ஸம்ஸ்க்ருதம், தமிழிலுமாக தரப்பட்டுள்ளது. அதனதன் அர்த்தங்களை தமிழில் சுருக்கமாகவும், உச்சரண பிழையின்றி வாசிக்க ஒலிக்குறி விளக்கமும் உள்ளது சிறப்பம்சமாகும்.
உதாரணமாக..
புத்திர்பலம் யஸோ தைர்யம் நிர்பயத்வமரோகதா |
ஆஜாட்யம் வாக்படுத்வஞ்ச ஹனூமத்-ஸ்மரணாத்-பவேத் ||

அதாவது புத்தியும், பலமும் புகழோடு துணிவும், நெஞ்சில் பக்தியும், அச்சமில்லாப் பணிவும், நோய் இல்லா வாழ்வும் உத்தம ஞானச் சொல்லின் ஆற்றலும் விழிப்பும் வாழ்வின் அத்தனைப் பொருளும் சேரும், அனுமனை நினைப்பவர்க்கே! ஆம்-திரேதாயுகத்தில் அவதரித்த ஸ்ரீராமசந்திரமூர்த்தியின் பக்தனாக இருந்து சிரஞ்சீவியான அனுமன் துவாபரயுகத்தில் அவதரித்த கிருஷ்ணன் அர்ஜுன்னுக்கு கீதை உரைக்கையில் தேர்க்கொடியில் அமர்ந்து பிரகாசித்தார். இந்த கலியுகத்தில் இந்த ஆஞ்சநேய ஸ்லோகங்களில் பொருளுணர்ந்து அவரை பூஜித்தால் நலம் யாவும் தாமே நம்மை தேடி

ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் [மாசி-பிப்ரவரி 2013]

வால்மீகி முதல் பல மகான்கள் அனுமனைப் புகழ்ந்து பாடிய சுலோகங்களிலிருந்து 44 தியான சுலோகங்கள் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் தரப்பட்டுள்ளன. பக்கம் 32-விலை ரூ.15/-

தின மணி - "வரப்பெற்றோம்" பகுதி [17 மார்ச் 2013]

ஸ்ரீ ஹநுமத் தியான ஸ்லோகங்கள் (தமிழ், ஸம்ஸ்கிருத எழுத்தில் அர்த்தத்துடன்); பக்.32; ரூ.15; வாயுசுதா பப்ளிகேஷன், தில்லி - 110 092 - 099587 27846.

தின மலர் - புத்தக மதிப்புரை - இணைய தளம் [2 ஏப்ரல் 2013]

ஸ்ரீ அனுமாரின் உருவத்தை வர்ணித்து அனுபவித்து ...அவரின் பல பல ரூபங்களும் குணாதிசயங்களும் அம்மகான்களை ஈர்த்தது .... அம்மகான்களால் அப்படி பாடப்பட்ட புகழ் மாலைகள் ஆங்காங்கு புழக்கத்தில் இருந்தது ...இவைகள் தியான ஸ்லோகங்கள் என்ற உயர்வை பெற்றது ...அப்படி பாரத தேசம் முழுவதும் வியாபித்து இருக்கும் புகழ் மாலைகளை முடிந்த அளவு ஒன்று சேர்க்கும் பணியின் சிறு முயற்சியே இந்த புத்தகம் ....

மதிப்புரை படிக்க சொடுக்கவும்

 

 

Vayusutha Publications is devoted to the devotees of Lord Hanuman.