பத்திரிகைகளின் மதிப்புரை

WELCOME TO THE TREASURE OF BOOKS IN PRAISE OF LORD HANUMAN




Sri Hanumath Dyana Slokangal - Irandam Thoguppuஸ்ரீ ஹநுமத் தியான ஸ்லோகங்கள் - இரண்டாம் தொகுப்பு
மொழி:ஸம்ஸ்க்ருதம்+தமிழ்
பக்கம் : 32
விலை : ரூ. 15/-


 

சிவ ஒளி [ஜூன் 2015]

இந்த ஶ்ரீஹநுமத் தியான ஸ்லோகங்கள் ௪௪ம் பல்வேறு மஹான்களால் அருளப்பட்டவை. ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள அட்ஷரங்கள் ஒவ்வொன்றும் வேறு வேறு ஒலியளவு கொண்டவை. அதே ஒலியளவில் தமிழின் துணை கொண்டும் உச்சரிக்கவும், உச்சாடனம் செய்யும் பொருட்டு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. குறிப்பாக, ’வட இந்தியாவில் ’ராம் ஸே படா ராம் நாம்’ என்பார்கள். ராமனின் மஹிமையை விட ஶ்ரீராமநாமத்தின் மஹிமை வலிமையானது என்பது பொருள். ஶ்ரீஆஞ்சநேயரின் பெருமைக்குக் காரணமே ஶ்ரீராமநாமந்தான்- இதை ௧0ம் பக்கம் ௫வது ஸ்லோகம் வெகு அழகாக விவரிக்கிறது.

ஸதா ராமராமேதி ராமாம்ருதம் தே
ஸதா ராமமானந்த-நிஷ்யந்த-கந்தம் |
பிபந்தம் நமந்தம் ஸுதந்தம் ஹஸந்தம் |
ஹனூமந்தமந்தர்-ப’ஜே தம் நிதாந்தம் ||

அதாவது ’எப்பொழுதும் ராம ராம என்ற உன்னுடைய ராமாம்ருதத்தை எப்பொழுதும் ஆனந்த பொழிவே கிழங்கு உருவான ராமனை பருகுபவரும், வணங்குபவரும், அவ்வானந்தத்தில் வாய்விட்டு சிரிப்பவரும் பல்லழகுடையவருமான அந்த ஹனூமந்தனை உள்ளத்தில் முழுமையாக த்யானிக்கிறேன். என்பதை உச்சரிக்கிறபோதே உச்சாடன்த்தில் அந்த வாயுபுத்திரனே எழந்தருளும் அற்புதத்தை அனுபவிக்க முடிகிறது.’ முன்னுரையிலே ஒரிடத்தில் ’செல்லின் பொருள் உணர்வது என்பது இலக்கணரீதியாக அல்ல- அநுபவ ரீதியாக- இந்த இலக்கை அடைய உதவியாக தியான ஸ்லோகங்கங்களுக்கு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது என குறிக்கப்பெற்றிருப்பது நூற்றுக்கு நூறு பொருந்துகிறது.

 

 

 

Vayusutha Publications is devoted to the devotees of Lord Hanuman.