home-vayusutha:
Contact Us
boat

VAYUSUTHA PUBLICATIONS :          Publishers of Religious books in praise of Lord Hanuman


WELCOME TO THE TREASURE OF BOOKS IN PRAISE OF LORD HANUMAN


பத்திரிகைகளின் புத்தக மதிப்புரை | Review of Books by Papers and Magazine
ஸ்ரீ ஹநுமத் ஸஹஸ்ரநாமம் | Sri Hanumath Sahasranamam

ஸ்ரீ ஹநுமத் ஸஹஸ்ரநாமம்
SRI HANUMATH SAHASRANAMAM

மொழி:ஸம்ஸ்க்ருதம்+தமிழ் [Sanskrit+Tamil]
பக்கம் : 128 + 8 [Pages 128 + 8]
விலை : ரூ. 50/- [Cost : Rs.50/-]

தினமலர் [29.06.2008]

Sri Hanumath Sahasranamam ஸ்ரீ ஆஞ்சநேயர் பெருமை அறியாதவர் யாரும் இலர். ராம்பிரானால் பெரிதும் போற்றப்பட்ட அறிஞர். தொண்டின் தூய உரு. தமிழகத்திலும் நாடு முழுவதும் மற்ற இடங்களிலும் ஆஞ்சநேயருக்கு பல இடங்களில் கோவில்கள் உள்ளன.

ஆஞ்சநேயரை வழிபட ஸகஸ்ரநாம ஸ்தோத்திரம்,ஸஹஸ்ர நாமாவளி, அஷ்டோத்திரம் ஆகியவை உள்ளன.

சம்ஸ்கிருதத்தில் உள்ள இவைகளை அர்த்தத்துடன், ஒலி பிறழாமல் சொல்ல, துதித்து வணங்க இந்த நூல் பெருமுயற்சியுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. சம்ஸ்கிருதச் சொல், அதற்கான தமிழ் எழுத்தில் அர்த்தமும் உள்ளது மிகவும் சிறப்பானது. ஸகஸ்ரநாமத்தில் 805 முதல் அடுத்துவரும் நாமாவளியின் அர்த்தம் இதோ:

பாபங்கள் அற்றவர், தர்மத்தின் காரணமானவர், அறத்தைக் கடைப்பிடிப்போருக்கு தெரிய வருபவர், உண்மை இவரே, வாய்மை வெல்லும்படி செய்பவர், மங்கள மூர்த்தி, சுந்தரவடிவினர் என்று இப்படியே தொடர்ந்து படிக்கும் போது மனம் மிகவும் மகிழும்.

வெற்றி வாகை சூடிய அனுமனை வணங்குவோர், அதன் அர்த்தம் புரிந்து படித்தால் எவ்வளவு பெருமை.

இதை உருவாக்கிய ஆசிரியர் முயற்சி பெரும் பாராட்டுக்குரியது. அனுமனை வழிபடும் அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டிய, படித்து தெளிவு பெற வேண்டிய நல்ல படைப்பு.

சக்தி விகடன் 16 ஆகஸ்ட் 2008

'சொல்லின் செல்வன்' 'நவவியாகரண பண்டிதன்' 'சமய சஞ்ஜீவி' உள்ளிட்ட பல திருநாமங்களைக் கொண்ட அனுமன், ராம நாம மகிமையை உலகறியச் செய்தவன். ஸ்ரீ ஆஞ்சநேயரின் புகழ்பாடும் ஸஹஸ்ர நாம ஸ்தோத்திரம் (ஆயிரம் திருப்பெயர்கள்), ஸஹஸ்ர நாமாவளி, அஷ்டோ த்திர சதம் (108 பெயர்கள்) முதலானவற்றைக் கொண்ட இந்த நூல் ஓர் அரிய முயற்சி. ஒவ்வொரு நாமத்துக்கும் தமிழில் பொருள் விளக்கமும் (மூலம் சமஸ்கிருத எழுத்திலும்) ஸஹஸ்ர நாமாவளியும் அச்சிட்டுள்ளனர். சத நாமாவளியில் ஒவ்வொரு நாமத்துக்கும் தமிழில் விரிவான விளக்கம் எழுதியுள்ளது வெகு அழகு.

'இந்த நாமங்களைப் பொருள் உணர்ந்து படிப்பதால், பக்தர்களிடம் ஓர் அனுபவத்தையே உற்பத்தி செய்யக் கூடிய வலிமை உள்ளது என்பது புரியும்' என்று முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது அனுபவரீதியான உண்மை.

ஞான ஆலயம் ஆகஸ்ட் 2008

ஸ்ரீராமரின் துயர் தீர்த்தவர் ஆஞ்சநேயர் - ஸ்ரீராமநாம மகிமையை அனைவருக்கும் போதிக்கும் குருநாதர். ஸ்தோத்திரப்பிரியரான ஆஞ்சநேயரைத் துதிப்பதன் மூலம் துயரங்கள் யாவும் நீங்கும். ஸ்ரீஹநுமத் ஸஹஸ்ரநாமம், தமிழ் மற்றும் சமஸ்கிருத எழுத்தில், முழுமயான அர்த்ததுடன் தொகுக்கப்பட்டுள்ளது. முதியவர்களும் படிக்கும் வகையில் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

கோபுர தரிசனம் ஆகஸ்டு 2008

அனைவருக்கும் மங்களம் அளிப்பவரும் வாயு பகவானின் புத்திரருமான ஸ்ரீஹனுமன் பலம் வாய்ந்தவர் மட்டுமல்லர். ஆபத்பாந்தவர். ஆநாதரக்ஷகர். அவரைத் துதிக்கத் திதிக்க ஆனைத்து அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். ஸ்ரீஹனுமனை வழிபட ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம், நாமாவளி, அஷ்டோத்ரம் எனப் பலவிதமான துதிகள் உள்ளன. ஸம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் அவற்றின் விளக்கவுரையுடன் இந்நூல் வெளியாகி உள்ளது. 'எங்கெல்லாம் இராமநாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் பக்தர்களை ரக்ஷிக்க நான் அங்கிருப்பேன்' என்கிறார் ஸ்ரீஹனுமான். அப்படிப்பட்ட ஹனுமனை வழிபட ஏற்ற நூல்.

ஆன்மீக பலன் - ஜூலை 2008

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக...

ஓம் ஸூராய நம: தைரியமாகக் காரியத்தில் இறங்கி, பயமில்லாமல் இருந்தால்தான் ஜயம் அடைய முடியும். பயமில்லாமல் ஒரு காரியத்தைச் செய்யக்கூடிய திறமை ஸூரனிடம் இருக்கும். ஆஞ்சநேயரிடம் பயம் என்பதற்கு இடமேயில்லை. ஸூராதி ஸூரர் அவர். அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் நம் பயமெல்லாம் விலகிப் போய் விடும். அவருக்கு நமஸ்காரம்.

சிவ ஒளி [ஜூன் 2012]

’பர’ வித்யைப் பயின்றவரின் பாதம் பணிவோம்…!
ஸ்ரீ ஹநுமத் ஸஹஸ்ரநாமம் எனும் நூலின் பெயரைப் படித்த மாத்திரத்திலேயே ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் திவ்யதரிசனம் நம் மனக்கண்ணில் விரிகிறது. எங்கெங்கு இராமனுடைய பெயர் கூறப்படுகிறதோ அங்கெல்லாம் அனுமான் கை கூப்பி நிற்கிறார் என்பதற்கொப்ப(128 பக்கங்களில் ரூ.50/- விலையில் வாயுசுதா பப்ளிகேஷன்- பி-82 சரஸ்வதி குஞ்ச், 25 ஐ.பி. எக்ஸ்டென்ஷன் டெல்லி-110092 எனும் முகவரியிலிருந்து வெளியாகியுள்ளது) இந்த ஸகஸ்ரநாமத்தை ஸம்ஸ்கிருத மூலமாகவும் அந்த மூல மொழியிலிருந்து தமிழில் கிளைக்கும் அர்த்தங்களை புரிந்து கொள்வதன் வழியாகவும் கருத்தூன்றி லயித்து வாசிக்கும் நிறைவில் எந்தக் கடவுளுக்கான ஸகஸ்ரநாமா ஆனாலும் அவைகள் மந்திர ரூபமாகக் கொள்ளப்படுகிறது. ஒலியின் உச்சாரங்களில் உள் உணர்வுகள் தூண்டப்படுகின்றன. இதற்கு ஸ்ரீ ஆஞ்சநேய ஸஹஸ்ரநாமமும் விதிவிலக்கல்ல.. என்றே வார்த்தைகளே ஆத்மாவுக்குள்ளிருந்து திரும்பத் திரும்ப உயிர்த்தெழுகின்றன. இந்நூலின் 25ம் பக்கத்தில்…
ஹிரண்யகர்ப: ஸூத்ராத்மா ராஜராஜோ விச’ம்பதி: |
கம் வாயு: ப்ருத்வீ ஹ்யாபோ வஹ்நிர் திக்பால ஏவ ச ||
அதாவது உலகைத் தன்னுள் அடக்கியவர் உடல் உயிர் ஒட்டியிருக்கச் செய்யும் சூத்ரதாரி (ப்ராணரூபி) அரசனுக்கு அரசர், ஆகாச ரூபமாக உள்ளவர். வாயுரூபமாக உள்ளவர். பூமி ரூபமாக உள்ளவர், நீர் ரூபமாக உள்ளவர். அக்னி ரூபமாக உள்ளவர், திசை நாயகனும் இவரே என்று ஸ்ரீஹனுமனைக் குறித்திருக்கிறது. அதே நூலின் 106ம் பக்கத்தில் ஓம் பரவித்யா பரீ ஹாராய நம: என்று ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியே ஆஞ்சநேயனுக்கு ஞானோபதேசம் செய்விக்கிறார், அதாவது வித்யை இரு வகைப்படும். பர, அபர அதில் அபர என்பது ரிக்வேதம், யஜுர் வேதம், ஸாம வேதம், அதர்வண வேதம், சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தஸ், ஜ்யோதிஷம் என்பதையும் பரவித்யை என்பது அழிவில்லாத சுகத்தை அளிப்பதான ஆத்மஞான சாஸ்திரத்தையும் குறிக்கும். அளிப்பறியா பர வித்யைப் பயின்றவர் ஆஞ்சநேயர். அவரை நினைத்தாலே நமக்கு மோக்ஷத்தை அருளவல்லவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பக்தர் மனம் ஒரு நிலையிட்டு பக்தியுடன் துதிக்கும் போதும் தொழும் போதும் அந்தத் திருதெய்வத்தின் உருவம் மறைந்து எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பேரொளிப் பிழம்பாய் பரந்தாமன் அருள்கிறான். இதனை கீதையில் கண்ணன் 7வது அத்தியாயத்தில்.. எந்த பக்தன் மனதினை ஒரு நிலைப்படுத்தி எந்த உருவத்தை தியானிக்கிறானோ அந்த பக்தனுக்கு மனதினை ஒரு நிலைப்படுத்த அருள் செய்து அவ்வுருவத்திலேயே தன்னைக் காணும் அறிவளிப்பேன் என்கிறார். பஞ்ச பூத வடிவிலும் சிரஞ்சீவியாய் இருக்கும் ஸ்ரீஆஞ்சநேயர் உருவிலேயே தன்னைத் தனக்கேயாக்கி உய்த்துணர..அவ்வுணர்வில் ஒன்றிக் கலக்க நாம் ஒவ்வொருவரும் அவசியம் வாங்கி வ(வா)சிக்க வேண்டிய வடமொழி மந்திரச்சொற்களின் தமிழ்க் கூடுசாலைதான் இந்த ஸ்ரீ ஹநுமத் ஸஹஸ்ரநாமம் ஆகும்.

 

 

Vayusutha Publications is devoted to the devotees of Lord Hanuman.

+